×

கூத்துப்பட்டறை நடிகரின் கங்கணம்

சென்னை: பழிவாங்குதலின் மூன்று பரிமாணங்களும் ஒரு புள்ளியில் மையம் கொள்ளும்போது என்ன நடக்கிறது என்பதுதான் ‘கங்கணம் ‘படத்தின் கதை. இப்படத்தை அ.இசையரசன் இயக்கியுள்ளார். இதற்கு முன் இவர் இயக்கிய ‘என் கண்ணே’ என்கிற குறும்படம் பல விருதுகள் பெற்றது. இப்படத்தின் கதையைக் கேட்ட கல்யாணி.கே மற்றும் சிரஞ்சன்.கேஜி ஆகியோர் தங்களது நிறுவனமான கல்யாணி இ என்டர்பிரைஸ் மூலமாக கங்கணம் படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்தின் கதையின் நாயகனாக கூத்துப்பட்டறை சௌந்தர் நடித்துள்ளார்.

இப்படத்தில் கதாநாயகிகள் அஸ்வினி சந்திரசேகர் இவர் ஜீவி 2, டைட்டில் படங்களில் நடித்துள்ளவர். மற்றொரு நாயகி மூன்றாம் மனிதன், குற்றச்சாட்டு, கிளாஸ்மேட் படங்களில் நடித்தவர் பிரணா. முக்கிய கதாபாத்திரத்தில் சிரஞ்சன் நடித்துள்ளார் ‘பருத்திவீரன்’ சரவணன் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். வில்லன் பாத்திரத்தில் சம்பத்ராம் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிஏ.சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். அண்மையில் பரபரப்பாகப் பேசப்பட்ட ‘முந்திரிக்காடு’ உட்பட ஆறு படங்களில் இவர் பணியாற்றி உள்ளார். நூற்றுக்கு மேற்பட்ட ஆல்பங்கள் உருவாக்கிய செல்வா இசையமைத்துள்ளார்

The post கூத்துப்பட்டறை நடிகரின் கங்கணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kanganam ,Koothupattarai ,CHENNAI ,A. Isaiarasan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...